கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம்.. முதலமைச்சர், சபாநாயகர் , அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தக்ஷிணாமூர்த்தி,ஏகேடி ஆறுமுகம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, புதிய நீதி கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் நிர்வாகிகள் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments