கல்லறைகளில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் மூதாதையர்களுக்கு கிறிஸ்துவ மக்கள் அஞ்சலி.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ம் தேதியை உயிர் நீத்த தங்கள் மூதாதையர் மற்றும் தங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து ‘கல்லறை தினம்’, ‘ஆத்மாக்கள் தினம்’ என கடைபிடிக்கின்றனர்.
அதன்படி, புதுச்சேரியில் கல்லறை திருநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதையடுத்து உப்பளம், நெல்லித்தோப்பு, வில்லியனூர், அரியாங்குப்பம், ரெட்டியார் பாளையம் உட்பட கிறிஸ்துவ கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் மலர்களை வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். கல்லறை திருநாளையொட்டி பல இடங்களில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
No comments