உளுந்தூர்பேட்டை அருகே கிளா பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிளாப் பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் மற்றும் தேசிய குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளுக்கு சுவையான கேசரி பாக்கு மட்டையில் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்கள் எடுத்து கூறும் வகையில் குழந்தைகள் தின விழாவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வும் இணைந்த கல்வியை மாணவர்கள் பெற வேண்டும் என்று நல்ல நோக்கத்தோடு காலை உணவு தயாரிக்கும் பெற்றோர்கள் மூலமாக பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த இனிப்பை அனைத்து ஆசிரிய பெருமக்களும் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சவரிமுத்து, அருணா.சூரியகுமார் , சாந்தி,பழனி, குமரவேல்,பாரதிராஜா வசந்தகுமார் சிலம்பரசன் மற்றும் ஆசிரியை வைஜெயந்தி மாலா, காலை உணவு தயாரிப்பவர்கள், பள்ளியின் உடைய சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு உடைய புகழை தலைமை ஆசிரியர்கள் எடுத்துக் கூறி சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் குழந்தைகள் தினம் ஏன் பள்ளியில் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கொண்டு வரக்கூடிய வகையிலேயே சிறப்பாக அமைந்தது.
No comments