புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழா.
புதுச்சேரி பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாப்பட்டது.
இவ்விழாவில், பள்ளி தாளாளர் பிரடெரிக் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஸ்டெல்லா வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக, அரசு பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் பிரியதர்ஷினி, அருட்தந்தை ஜோசப் பால், ஜிப்மர் மருத்துவமனை பேராசிரியர் வெங்கடாசலம், பள்ளியின் முன்னாள் மாணவரும், அப்போலோ மருத்துவமனை இணை ஆலோசகர் பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தொடர்ந்து, அவந்திகா போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கும்,ஒவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், பள்ளி மருத்துவ இயக்குநர் ஜீட்டா பிரடெரிக், ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments