முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை பலப்படுத்த வேண்டும்: பிற கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை.
தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து, விவேகானந்தர்நகர் ஊர் தலைவர் முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் அப்பகுதியை சேர்ந்த மணிராஜ், மாரிச்செல்வம், சுந்தரலிங்கம், சூர்யா, வெற்றிவேல், லட்சுமி, தம்புலட்சுமி, பாண்டி, வீரபெருமாள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், திராவிட முன்னேற்றக்கழகம் 75 ஆண்டு பவள விழாவை கொண்டாடிய ஒரு இயக்கமாகும். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்று நீங்கள் அனைவரும் திமுகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம். திமுக அரசு மக்களுக்கு செய்த சாதனைகளை சொல்லி எதிர்வரும் 2026ல் சட்டமன்ற தேர்தலில் உங்கள் பகுதியில் திமுக கட்சிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரத்தை பலப்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிற்கேற்ப திமுகவில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஓருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி பொருளாளர் உலகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.
No comments