குற்றவாளிகளை வளர்த்து விடுவதும், அவர்களை பாதுகாப்பதும் முதலமைச்சர் ரங்கசாமியும்,அமைச்சர் நமச்சிவாயமும் தான்..
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி,
கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை எனக் கூறிய நமச்சிவாயம், அமைச்சரவையில் இருந்து ஏன் வெளியேறவில்லை என்றும் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு கட்சி மாறியபின் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
குற்றவாளிகளை வளர்த்து விடுவதுடன் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் தான் என்ற அவர், இவர்கள்தான் புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிள்ளது என்றார்.
ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்ய என்னிடம் சிபாரிசுக்கு வந்தவர் தான் நமச்சிவாயம். அதற்கு நான் ஒத்துழைக்கவில்லைகொலை குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் அமைச்சர் நமச்சிவாயம்.8-வது முறையாக கட்சி மாறியுள்ள நமச்சிவாயத்திற்கு, என்னை பற்றி பேச தகுதி இல்லை என்றார்.
No comments