குழந்தைகள் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறந்த படைப்பாளி குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் 'குழந்தைகள் நாள் விழா 2024' இன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி முதன்மை விருந்தினாராக பங்கேற்று சிறந்தப் படைப்பாளிக் குழந்தைகளுக்கான விருதுகளை வழங்கினார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் விழாவிற்குத் தலைமை ஏற்று குழந்தைகள் நாள் விழா போட்டிகளில் மண்டல அளவில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்பி ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் பள்ளிகள் தொடங்கவும் CBSE மற்றும் ICSE அங்கீகாரம் பெறவும் தேசிய தகவலியல் மையம் மூலம் தொடங்கப்பட்ட இணையதளத்தை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.மேலும், பள்ளிக்கல்வித்துறை மூலம் இந்த வருடம் பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் மற்றும் 6-ஆம் வகுப்புக்கான புதுச்சேரியின் வரலாறு புத்தகமும் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி, துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments