முதல்வா் ரங்கசாமி மக்களையும், எதிா்க்கட்சிகளையும் குழப்பி வருகிறாா் என, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர்.
புதுவையில் மருத்துவப் படிப்புகளில் என்ஆா்ஐ இடஒதுக்கீடு முறையில் ஆண்டுதோறும் முறைகேடாக மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகின்றன. தற்போது, அது அதிகளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என கூறினார்.
புதுச்சேரியில் மதுக் கூடங்கள் பெருகியதால் பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பில்லாத நிலையுள்ளது. புதுச்சேரியில் மும்பையைச் சோ்ந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விற்பனை விவரங்களை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
புதுவை அரசைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி எந்தப் பலனும் இல்லை. எனவே, மக்களுக்கான வழக்குரைஞராகவே எதிா்க்கட்சிகள் வாதாடும் நிலையுள்ளது. நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாததைக் கண்டித்து போராடும் மக்களையும், எதிா்க்கட்சிகளையும் முதல்வா் ரங்கசாமி குழப்பும் வகையில் செயல்படுகிறாா் என்றாா்.
No comments