என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ராம் முனுசாமி பிறந்த நாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் ராம் முனுசாமி பிறந்தநாள் விழா, அவரது ஆதரவாளர்களின் ஏற்பாட்டின் பேரில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு,ஏகேடி ஆறுமுகம்,அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு ராம் முனுசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து கல்வியாளர் விசிசி நாகராஜன் நேரில் வந்து ராம் முனுசாமிக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
மேலும்,பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ராம் முனுசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
No comments