Breaking News

தேனியில் இந்து முன்னணியின் பண்பு பயிற்சி முகாம்.


தேனி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் சின்னமனூர் கவிதா தாமோதரன் மஹாலில் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு மதுரை கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் V.சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன் முன்னிலையில் சிறப்பு விருத்தினர்கள் பாஜக. கவுன்சிலர் கிருஷ்ணவேணி பிரபாகரன், நல்லி மெட்ரிக்குலேசேன் தாளாளர் ராமர், தொழிலதிபர் பல்தேவ் திருவிளக்கு ஏற்றி வைக்க பயிற்சி முகாம் துவக்கியது.

காலையில் உடற்பயிற்சி, யோகா மற்றும் இந்துமுன்னணி துவக்கம், கோரிக்கைகள் கிளைகமிட்டி அமைப்பது தொடர்பான கருத்துக்கள் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமினை மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் K.கணேஷ்குமார், ஆச்சி கார்த்திக், HYF ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா வழிகாட்டினர். பயிற்சி முகாமில் 85 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

No comments

Copying is disabled on this page!