சோழவரம் அருகே கோவிலின் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு கிராமத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. நேற்றிரவு இந்த கோவிலின் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை பூஜைகளுக்கு மீண்டும் வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த சில்லறை காசுகள் கீழே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆலய நிர்வாகிகள் வந்து கோவிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் உண்டியலை உடைத்து திருடுவது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் பேரில் போலீசார் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments