கானாபாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார்..
கானாபாடல் பாடகி இசைவாணி என்பவர் இந்து மத கடவுள் ஐயப்பன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இரு மத மோதலை உருவாக்கும் வகையில் பாடல் இயற்றிய பாடகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாஜகவினர் இன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன், கோவி.சேதுராமன், நாஞ்சில் பாலு, பெருஞ்சேரி சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
No comments