புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் மகாத்மாகாந்தி மருத்துவ கல்லுாரியில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சீனியர் எஸ்பி பிரவின்குமார் திரிபாதி பங்கேற்று போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து மருத்துவ கல்லுாரி மாணவ –மாணவிகளிடம் உரையாற்றினர்.மேலும் ,போக்குவரத்து விதிகள் தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேங்களுக்கும் விளக்கமளித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
No comments