எழுத்தாளர் செந்தில் விஸ்வநாதன் எழுதிய "யார் சொல்லக்கூடும் வாழ்வில் தேடல்களை" என்ற நூலினை சபாநாயகர் செல்வம் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டு சிறப்பித்தனர்..
எழுத்தாளர் செந்தில் விஸ்வநாதன் எழுதிய "யார் சொல்லக்கூடும் - வாழ்வின் தேடல்களை" என்று நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்றது.
நூல் ஆசிரியர் செந்தில் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் செல்வம்,அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிமாமுனிவர் கல்லூரி பேராசிரியர் முனைவர் கிருஷ்ணகுமார்,தாகூர் கல்லூரி உளவியல் துறை தலைவர் முனைவர் இராம பிரபு, ஆறுபடைவீடு மருத்துவ கல்லுாரி துணை பதிவாளர் பெருமாள், மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி பேராசிரியர் ஆயி, மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments