அரவிந்தர் ஆசிரமவாசியிடம் போலி ஆன்லைன் பங்கு சந்தை இணையதளம் மூலம் ரூ. 6 கோடி மோசடி..
புதுச்சேரி வாழைக்குளம், அப்பாவு நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த அஷித் குமார் மிஸ்ரா, 67; அரவிந்தர் ஆசிரமம் புக் ஸ்டால் கணக்காளர். கடந்த 20 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம், அடையாளம் தெரியாத நபர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆஷித் குமார் மிஸ்ராவை சேர்த்தனர். குழுவில் இருந்த மர்ம நபர் ஆஷித்குமார் மிஸ்ராவை தொடர்பு கொண்டு, இரட்டிப்பு லாபம் தரும் பங்கு சந்தையில் முதலீடு செய்வது குறித்து பயிற்சி அளித்ததுடன், சிறிய தொகையை முதலீடு செய்ய தூண்டினர்.ஆஷித் குமார் மிஸ்ரா சிறிய தொகையை முதலீடு செய்ததும், உடனடியாக பணம் இரட்டிப்பாக்கி கொடுத்தனர். இதனை நம்பிய ஆஷித் குமார் மிஸ்ரா மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் தொடர்ச்சியாக ரூ. 6 கோடி வரை முதலீடு செய்து ஏமாந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆஷித் குமார் மிஸ்ரா புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் பணம் ஏமாற்றிய சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments