புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் யானை முகம், சிங்க முகம் எடுத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சக்திவேலைக் கொண்டு சம்ஹாரம் செய்யும் நிகழ்வு..
கந்தசஷ்டி பெருவிழாவின் ஆறாம் திருநாள் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யுமா ஐதீக நிகழ்வு தமிழகம் முழுவதிலும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குரு பரிகார ஸ்தலமாக விளங்கும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் செய்யும் ஐதீக நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி யானை, சிங்கம், அசுரன் ஆகிய மூன்று முகங்களைக் கொண்ட சூரனை ஒவ்வொன்றாக தன் சக்திவேலைக் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இதேபோல் பல்வேறு ஆலயங்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தின் மண்டபத்தில் முருகப்பெருமான் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி யானை, சிங்கம், அசுரன் ஆகிய மூன்று முகங்களைக் கொண்ட சூரனை ஒவ்வொன்றாக தன் சக்திவேலைக் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments