சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் நாத்து நடும் போராட்டம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சேரும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் இறங்கி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments