தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்..
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,
புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மீனவர்கள் கடந்த 4 நாட்களாக தொழிலுக்கு செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றார்.
மேலும், கடந்த காலங்களில் மத்திய அரசால் வழங்கப்பட்ட பேரிடர் கால நிதி முறையாக செலவு செய்யப்படாமல் அதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பேரிடர் கால நிதி இருந்தால் கருணை அடிப்படையில்,ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் சரியாக மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அவர், சமுதாய நலக்கூடங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் பூட்டிய நிலையில் உள்ளதால் மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கான போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றார். உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
No comments