வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள், ஆட்சியர் ஆய்வு..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் உள்ள பெரியக்குளம் வாய்க்காலில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து,பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து திருமஞ்சன வீதி,பட்டமங்கலம் ஆராயத்தெருவில் உள்ள வடிகால் வாய்கால்களில் மழைநீர் செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர் மயிலாடுதுறை காவேரி ஆற்றங்களை துலாகட்டம் படித்துறைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து,எதிர்வரும் துலாகட்டம் நிகழ்வில் பக்தர்கள் சிரமமின்றி நீராடுவதற்கு ஏற்றவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஊரக,நகர பகுதிகளில் மழைநீர் வடிவதற்குரிய வாய்க்கால்களை உடனடியாக ஆய்வு செய்து,வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர், மயிலாடுதுறை நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன் மற்றும் அரசு அலுவலகங்கள் உடனிருந்தனர்.
No comments