Breaking News

மகள் திருமணத்திற்கு வந்த அரபு நாட்டு முதலாளிக்கு உற்சாக வரவேற்பு.நடனமாடி மகிழ்ந்த அரபி முதலாளி.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சவுதி அரேபியா தமாம் அருகே உள்ள அல் கசா என்ற ஊரில் அபூ வாஹித் என்ற முதலாளியிடம் வணிக நிறுவனத்தில் சுமார் 32 ஆண்டுகளாக தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் அனீஸ் பாத்திமா விற்கும், காரைக்குடியைச் சேர்ந்த சபீர் அகமதுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெற்ற நிலையில், சாகுல் ஹமீது தனது நிறுவன முதலாளி அபு வாஹித், மற்றும்  அவரது உறவினர்களான, ஹம்சா, அப்துல் ரகுமான் ஆகியோரை சவுதி அரேபியா நாட்டிலிருந்து அழைத்து வந்தார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு இரண்டு குதிரைகள் பூட்டிய சரட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மேல தாலங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது பூரிப்படைந்த முதலாளின் உறவினர் அப்துல் ரகுமான் என்ற அரபி, குதிரை வண்டியிலே நடனம் ஆடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.அதன் பின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, காரைக்குடி மக்களிடம் சந்தித்து உறவாடினர். 

No comments

Copying is disabled on this page!