ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாடி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பெரும்பாலும் கூரை வீடு மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயராமன் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் அவரது மனைவி தனலட்சுமி வயது எழுவது கணவனை இழந்த பின் கூரை வீட்டில் வசித்து வந்த நிலையில் ஆண்டுதோறும் பருவ மழை நாட்களில் அவதி பட்டு வருகிறார்.நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் பலத்த மழை காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக தனலட்சுமி உயிர் தப்பினார். அதோடு பலமுறை உங்களுக்கு தொகுப்பு வீடு மற்றும் கலைஞர் வீடு வந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தும் நான்கு ஆண்டு காலமாக இதே வீட்டில் வசித்து வருவதால் அவருக்கு ஏதேனும் அரசு வீடு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
No comments