புதுச்சேரி நேரு வீதியில் தவறவிட்ட தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநர்..!!
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக நேரு வீதிக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த தங்க மோதிரம் காணாமல் போனது. இது தொடர்பாக பெரிய கடை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதனிடையே அரியாங்குப்பம் மாதா கோவில் ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த ஓட்டுனர் ராஜா, நேரு வீதிக்கு சவாரி வந்தார். அப்போது வாடிக்கையாளருக்காக காத்திருந்தபோது சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை கண்டெடுத்தார். அதற்கு உரியவர்கள் அங்கு யாரும் வராததால், பெரிய கடை காவல் நிலையத்தில் தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் ராஜாவிற்கு, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
No comments