அகில இந்திய சூர்யா நற்பணி மன்றம் சார்பில் ரசிகர்கள் மதுவுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றது பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது:-
யூ.வி கிரியேஷன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் இன்று வெளியாகியது. அந்த வகையில் மயிலாடுதுறையில் கங்குவா திரைப்படம் ரத்னா திரையரங்கில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க சென்றனர். மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய சூர்யா நற்பணி மன்றம் சார்பாக படம் பார்க்க வந்த ரசிகர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெற்றி அடைய வேண்டும், சூர்யா படம் இன்று வெளியாவதை முன்னிட்டு மது அருந்த மாட்டோம் என்றும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று ரத்னா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்று உற்சாகத்துடன் படம் பார்க்க சென்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
No comments