சோளிங்கர் மலைக் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்.
ஆந்திர மாநிலம் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா அவருடைய கணவர் திரைப்பட இயக்குனர் ஆர் கே செல்வமணி ஆகியோர் தீபாவளியை முன்னிட்டு சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மலை கோவிலுக்கு வருகை தந்தார்.
இவருக்கு சோளிங்கர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் சால்வை அணிவித்து வரவேற்றார், பின்னர் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மலைக்கோவிலில் ரோப் காரில் சென்று லட்சுமி நரசிம்ம சுவாமியை சாமி தரிசனம் செய்தார்.
இவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டன, உடன் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். என். ஜி .பார்த்திபன், அமமுக நகர செயலாளர் சீனிவாசன் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் நாகராஜ் மதன் சதீஷ் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
No comments