தூத்துக்குடி வந்த நடிகர் ஸ்ரீநாத் குரூஸ்பர்னாந்து திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
தூத்துக்குடி வந்த குணசித்திர நடிகர் ஸ்ரீநாத் குரூஸ்பர்னாந்து சிலை மற்றும் தேர்மாறன் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் விஜயின் நாளைய தீர்ப்பில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத். தனது சொந்த ஊரான தூத்துக்குடி வந்த நடிகர் ஸ்ரீநாத்திற்கு பாண்டியபதி தேர்மாறன் கல்லறை மீட்புக்குழுவினர் சிறப்பான வரவேற்று அளித்தனர். பின்னர், நடிகர் ஸ்ரீநாத் ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாண்டியபதி தேர்மாறன் கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சென்னை பரதவர்குல பேரவை சட்ட ஆலோசகர் வெலிங்டன், பரதவர்குல முன்னேற்ற பேரவை தலைவர் தயாளன், சென்னை பரதர் நல பேரவை செயலாளர் ஜூடுராஜன், பரதவர் முன்னேற்ற பேரவை அமைப்பு செயலாளர் ஆரோக்கிய பெர்னான்டஸ், தில்லை அசோக், விஜயகுமார், பாரசு, ஜெகன், கனிஷ்டன், ஜான்சன், இன்னாசி, அந்தோணிசாமி, ஆரோக்கியசாமி, பெல்லா, பெசி, அனுஷ்யா, ஆனந்தி, பெனோ, ஜோன்ஸ், பாரத், பிரகாஷ், விஜயன், ரோச் பரதர், வினோத், பிரசாத், சேசுராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments