வில்லியனுார் பைபாஸ் கண்ணகி பள்ளி அருகே ஒதுக்குபுறமாக ஹைமாஸ் மின் விளக்கை மையமாக வைத்து ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள்..
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் எம்.என்.,குப்பம் முதல் இந்திராகாந்தி சிலை வரையில் 11.240 கி.மீ., துாரத்திற்கு சாலை அகலப்படுத்தி இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி, சென்டர் மீடியம் அமைத்துள்ளனர். மேலும் ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் நடைபாதை, எல்.ஈ.டி மின் விளக்கு வசதிகளுடன் 360 மீட்டர் நீளத்தில் 18 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட புதிய மேம்பாலம் அமைத்து கடந்த வாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
புதிய மேம்பாலத்தை தொடர்ந்து வில்லியனுார் பைபாஸ் கண்ணகி பள்ளி ரவுண்டான உள்ளது. வில்லியனுார் நகருக்கு செல்லும் பகுதியில் ஹைமாஸ் மின் கம்பத்தை மையமாக வைத்து, பைபாஸ் சாலைக்கு ஒதுக்குபுறமாக ரவுண்டானா அமைத்துள்ளனர்.பைபாஸ் சாலையில் வாகனங்கள் அதிவேகமாகவே செல்லுகின்றது. இதனால் வில்லியனுார் பகுதியில் இருந்து பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அவ்வப்போது விபத்துகளை சந்தித்து வருகின்றது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்துறை அதிகாரிகள் ஹைமாஸ் மின் கம்பத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி பைபாஸ் சாலை நான்கு ரோடு சந்திப்பு மையப்பகுதியில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments