நெல்லையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் தேமுதிக கட்சியை சேர்ந்த மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமையில் 10க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் இன்று அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
புதிதாக கட்சியின் இணைந்தவர்களுக்கு மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்பி முத்து கருப்பன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
No comments