மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு..
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் கடற்கரை மீனவ கிராம பகுதிகள் சட்டவிரோதமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் முதலமைச்சர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மீனவ சமுதாய மக்களுக்கு 10 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தற்போது பேசியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இதே வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இருந்த போது மீனவர்களுக்கு 7 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் அதிமுகவின் கோரிக்கையை ஏற்காமல் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் வெறும் 2 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கினார்.ஆட்சி அதிகாரம் முதலமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்த போது மீனவர்களுக்கு ஏன் 10 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வழங்க முன்வரவில்லை. ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு. ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாடா? இது ஏமாற்று செயல் அல்லவா? என கூறினார்.
சட்டமன்றத்தில் மீனவ சமுதாய மக்களுடைய நலனுக்காக அதிமுகவை தவிர வேறு எந்த அரசியல் கட்சியாவது சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளனரா என்பதை மீனவ சமுதாயத்தினர் எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.
No comments