குடியாத்தம் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்தக் கலைத் திருவிழாவில் கலந்து கொண்ட குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி மற்றும் குடியாத்தம் திமுக நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments