Breaking News

காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மீனவ கிராமத்தில் திடீரென்று சுனாமி ஏற்பட்டால் அங்கு வசிக்கும் மீனவ மக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை பேரிடர் துறை அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் செயல் விளக்கம் செய்தனர். மேலும் இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!