சமூக நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி..
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.
சமூக நலத்துறை செயலர் முத்தம்மா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறை இயக்குனர் ராகினி முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
6 பிரிவுகளில் நடந்த பல்வேறு போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தினஸவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
No comments