மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்..
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாநகராட்சி, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட இ-சேவை மையம், நில அளவை, சுகாதார நலப்பணிகள், பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், சத்துணவு, புவியீயல் மற்றும் சுரங்கங்கள் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் பயிற்சி நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சமூக நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் வளர்;ச்சித்திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி அவாஸ்யோஜனா, தீனதயாள் அந்தோதயாயோஜனா, பிரதமந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளுர் வளர்ச்சித் திட்டம், அழகிய நகரமயமாக்கல் பணி, உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து, அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர், திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments