புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறை கேட்டு கூட்டம் இன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி காவல்துறை கிழக்கு, மேற்கு,தெற்கு,வடக்கு மற்றும் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள எஸ்பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.குறை தீர்ப்பு கூட்டத்தை ஒட்டி போலீஸ் நிலையங்கள் களை கட்டியிருந்தது. பல்வேறு தரப்பினரும் தங்கள் குறைகளையும், புகார்களையும் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தனர். அவர்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தொடர் நடவடிக்கைகள் குறித்து, இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டு உடனடியாக குறைகளை களைய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதனால் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
No comments