ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்ட மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் "ஊட்டச்சத்தை உறுதிசெய்"எனும் தலைப்பில் இரண்டாம் கட்டமாக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு பகண்டை கூட்டுச்சாலையில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி, தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கான சிறப்புத் திட்டங்களை எடுத்துரைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் அரசு துறைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள், ஒன்றிய பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments