Breaking News

தருமபுர ஆதீனம், ரஷ்யா, கஜகஸ்தான் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்:-

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலகப் புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயிற்காக எமனை வதம் செய்ததால் அட்ட விரட்ட தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு புனித நீர் அடங்கிய 1008 சங்குகள் மற்றும் கடங்களை வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு 1008 சங்குகள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரம் அருகே பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

இதில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், ரஷ்யா, கஜகஸ்தான் நாட்டைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் ஆலயத்திற்கு வந்திருந்த ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் தருமபுர ஆதீனத்திடம் அருளாசி பெற்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

No comments

Copying is disabled on this page!