வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு முதற்கட்ட ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நான்காம் நிலைக்கு இணையான D கிரேட் ஊதியம் வழங்கிட வேண்டும்,கிராம ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி அரசு ஆணை 33-ல் திருத்தம் செய்து கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் வட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments