காமராஜர் ஓவிய கலைக்கூடம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஓவியப் போட்டி..
காமராஜர் ஓவிய கலைக்கூடம் சார்பில் சாதனையாளர் விருது மற்றும் மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி தமிழ் சங்கத்தில் இன்று நடைபெற்றது.
காமராஜர் ஓவிய கலைக்கூடத்தின் நிறுவனர் திலக் தலைமையில் நடைபெற்ற விழாவில், மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலாளர் சந்திரமோகன்,பாவலர் ஆதி.சுப. சரவணன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர் ஆறு.செல்வம், சமூக சமநிலை செயல்பாட்டாளர் மேகராஜ், ஆதி திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மதர்ஸ் முதியோர் இல்லத்தின் நிறுவனர் பரணிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். மேலும் ஓவிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய இயக்குனர் இளங்கோவன், ஓவியம் வரையும் மாணவர்களுக்கு எழுத்துத் திறன் அதிகரிக்கும் என்றும் இதனால் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என கூறினார். இந்தியாவிலேயே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி முன்மாதிரி மாநிலமாக புதுச்சேரி உள்ளதாகவும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் அதிகாரிகளாக வரவேண்டும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments