உளுந்தூர்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் , உளுந்தூர்பேட்டை அரிமா சங்கம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராக அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக் குமார் சோர்டியா கலந்து கொண்டார் மேலும் நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் ராஜப்பன் முன்னிலை வகித்தார் செயலாளர்கள் ஆறுமுகம் , ரமேஷ் வரவேற்றனர்,நிர்வாகிகள் பர்சன்,பதம், சத்தியசீலன், மோகன் நாயுடு,மோகன்,மனோகரன்,துரை,கொளஞ்சி,ரங்கநாதன்,மேலும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் சாய் அப்போலோ பாரா மெடிக்கல் செவிலியர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் 130க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர் அதில் 35 க்கும் மேற்பட்டோர் கண் அறுவை சிகிச்சைக்கு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும் பொருளாளர் ஆனந்த் நன்றி உரையாற்றினார்.
No comments