உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு இயல் இசை நாடக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 102 ஆவது நினைவு நாடக விழா நடைபெற்றது. தமிழ்நாடு இயல் இசை நாடக கலை மாநில தலைவர் சத்தியராஜ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கலை நிகழ்ச்சி துவக்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, முனைவர் தொல்காப்பியம், நகர மன்ற உறுப்பினர்கள் கலா சுந்தரமூர்த்தி, செல்வகுமாரி ரமேஷ் பாபு, மற்றும் நாடக கலைஞர்கள் துரைமுருகன், பாரதி ராஜேந்திரன், விஸ்வநாதன், ராமச்சந்திரன், ஜெயராஜ், கண்ணாயிரம் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து கலை மற்றும் நாடகக் கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments