தனியார் நிறுவனத்தில் நுழைந்த 6 அடி உயர நல்ல பாம்பு! தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி ஜோதிநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலை ஜோதிநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பாம்பு பதுங்கியிருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த நிறுவனத்திற்கு விரைந்தனர். அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று சுவர் ஓரமாக பதுங்கியிருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக உயிருடன் பிடித்தனர். பின்னர், அந்த பாம்பினை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். தனியார் நிறுனத்தில் நுழைந்த பாம்பினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments