திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் மதிப்பிலான 650 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் போலீசார் குலசேகரன்பட்டினம் வடக்கூர் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக பீடி இலைகளை படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். க்யூ பிரிவு போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் படகில் தப்பிச் சென்றனர். இதில் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ எடை கொண்ட 21 பண்டல்களில் இருந்த சுமார் 650 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments