Breaking News

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையொட்டி ஒரே நாளில் 650 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.

 


புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க 2 தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

அதன்படி நாள் ஒன்றுக்கு 2 நிறுவனங்களும் சராசரியாக 500 முதல் 550 டன் வரை குப்பைகளை சேகரித்து குருமாம்பேட் குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். விழாக்காலங்களில் அதிகளவில் குப்பைகள் வருவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்த நிலையில் தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் பேப்பர்கள், அட்டை பெட்டிகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் சாலைகளிலும், வீதிகளிலும் சிதறி கிடந்தது.

ஆகையால் அந்த குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் நகர பகுதியில் 450 டன் குப்பையும், கிராமப்பகுதியில் 200 டன் குப்பையும் என மொத்தம் 650 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் 100 டன் குப்பைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!