பனங்குடியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ரஷ்யா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6பேர் பேர் சாமி தரிசனம்.
இந்து மதம் தமிழர்களின் கலாச்சாரத்தையும் தமிழகத்தில் உள்ள கோயில்களையும் அறிந்து கொள்வதற்காக ரஷ்யா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அலெக்ஸி என்கிற மித்ரா நந்தா தேவ், அண்ணா, தேஜா நந்தா, அருணிமா தேவி, உள்ளிட்ட ஆறு பேர் மயிலாடுதுறை காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நவக்கிரக கோயில்களுக்கு சென்று விட்டு தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை ஊராட்சி பணங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வெளிநாட்டினர் கொண்டு வந்த ஆறடி உயரமுள்ள வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பூஜை செய்யப்பட்ட வேலுடன் பழனிக்கு சென்று முருகனை வழிபட உள்ளதாக தெரிவித்த ரஷ்யா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பக்தர்களுக்கு கோயில் குருக்கள் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து சீதளா தேவி மாரியம்மன்க்கு நடைபெற்ற அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தனர். பூஜிக்கப்பட்ட வேலுடன் பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். இந்த வெளிநாட்டு பக்தர்கள் சித்தூர் நாடி ஜோதிடர் கோபிநாத் தலைமையில் ஆலய தரிசனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments