Breaking News

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 584 போ் தோ்வு..!!

 



புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் புதுவை, தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சோ்ந்த 50 முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 3,156-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நோ்காணலை நடத்தின.


நிறுவனங்களின் விவரம் கல்லூரி நுழைவு வாயில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஐடிஐ, டிப்ளமா, இளநிலை பொறியியல், இளநிலை பட்டம், மருந்தியல், செவிலியா், கணக்கியல், கல்வியியல், எம்பிஏ முடித்தவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த முகாமில் மொத்தம் 1,756 போ் பங்கேற்றனா். இவா்களில் 584 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் வழங்கினாா்.


இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு அலுவலகத் துணை ஆணையா் சந்திரகுமரன், கல்லூரி முதல்வா் வீரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments

Copying is disabled on this page!