Breaking News

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் 50 பேரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்த புதுச்சேரி விசிக நிர்வாகி அய்.தமிழ்வளவன்!

 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வில்லியனூர் தொகுதி செயலாளர் அய்.தமிழ்வளவன்  ஒருங்கிணைப்பில் நெட்டப்பாக்கம் தொகுதியைச் சார்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கணேசன் விசிக தேசிய தலைவர் தொல். திருமாவளவன் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சியின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன்  என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கணேசன்  வில்லியனூர் தொகுதி செயலாளர் அய்.தமிழ் வளவன் அறிமுகம் செய்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து தொல்.திருமாவளவனுக்கு என். ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கணேசன் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.இதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவன் கணேசன்  தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியின் மப்ளர் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் .

இந்த இணைப்பு நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு பணிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் முரளிதரன், தமிழ்வாணன்,செந்தில்,ஈழவளவன், சிவச்சந்திரன், செந்தமிழன், இளங்கோ,பாக்கியராஜ், செல்வராசு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



No comments

Copying is disabled on this page!