Breaking News

கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகு, இரண்டு மோப்ப நாய்களுடன் தயார்...

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை புரிந்துள்ளது.தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சீர்காழிக்கு 30 பேர் வந்துள்ளனர், இடர்பாடுகளின் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் கருவிகள் அரிவாள், பாறை, மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ரப்பர் படகு மேலும் அதி நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் என 60 வகையான கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி ஆகியோர் தலைமையில் இடர்பாடுகளை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

No comments

Copying is disabled on this page!