மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 26- வது பட்டமளிப்பு விழா.
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 26- ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக சென்னை தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப குழு செயலாளர் டாக்டர் எஸ். வின்சென்ட் அவர்களும், சிறப்பு விருந்தினராக சென்னை க்ரிடிகான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அபெக்ஸ் ஒருங்கிணைப்புக் குழுவின் இயக்குநர் ஜெயின் அவர்களும் வருகை புரிந்தனர்.
உடன் கல்லூரித் தலைவர் எம்.விமல் சந்த் ஜெயின், இணைத் தலைவர் சி. லிக்மி சந்த் ஜெயின், தலைவர் வி. திலீப் குமார் ஜெயின், செயலாளர் ஆனந்த் சிங்வி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் ஜெயின், நவீன் குமார் ஜெயின் பொருளாளர் லலித் குமார் ஜெயின் ஆகியோர் தலைமை வகிக்க முதல்வர் டாக்டர் எம். இன்பவள்ளி, திருவள்ளுவர் பல்கலைக்கழத் தேர்வில் மாணவிகள் 10 தங்கப்பதக்கங்களையும், தரவரிசைப் பட்டியலில் 102 இடங்களையும் பெற்று இளங்கலை மாணவிகள் 700 பேரும், முதுகலையில் 246 பேரும் மொத்தம் 946 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
No comments