திருச்செந்தூரில் தொழிலதிபர் விஎஸ் நடராஜன் பக்தர்களுக்கு 200 லிட்டர் பாதாம் பால் வழங்கினார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த இரண்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் பல்வேறு வாகனங்களில் சண்முகநாதர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் தொழிலதிபர் விஎஸ் நடராஜன் ஏற்பாட்டில் கந்த சஷ்டி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதாம் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 3 வது நாளாக பக்தர்களுக்கு 200 லிட்டர் பாதாம் பால் வழங்கப்பட்டது. சஷ்டி திருவிழா முடியும் வரை தொடர்ந்து பக்தர்களுக்கு பாதாம் பால் வழங்கப்படுகிறது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments