ஒரே நாளில்12 பேரிடம், ரூ. 3.18 லட்சம் ஏமாற்றியமோசடிக்காரர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இளைஞர் ஒருவரிடம், அவரது கிரெடிட் கார்டிற்கு 90 ஆயிரம் பரிசு விழுந்ததாக கூறி, குறிப்பிட்ட சில தகவல்களை மர்ம நபர்கள் கேட்டனர்.அதை நம்பி, தகவல்களை அனுப்பிய உடன், அவருடைய அக்கவுண்ட்டில் இருந்து, 9 ஆயிரத்து 999 ரூபாய் எடுக்கப்பட்டது.
ஒரு நபரிடம் 'ஸ்கிராட்ச்' கார்டில் 10 ஆயிரம் பரிசு விழுந்ததாக மர்ம நபர்கள் கூறினர். அதை பெற, 499 செலுத்தி, அவர் ஏமாந்தார். அதேபோல, இணைய வழியில் டாஸ்க் முடித்தால், அதிக பணம் தருவதாக, மோசடிக்காரர்கள் தெரிவித்தனர்.இதை நம்பி மூன்று பேர் முறையே 59 ஆயிரம், 25 ஆயிரம், 3 ஆயிரத்து500 ரூபாயை பறி கொடுத்தனர். பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு லோன் வாங்கி தருகிறோம் என, மூன்று பேரிடம், 28 ஆயிரம்; 6 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர்கள் ஏமாற்றினர்.
தனியார் வங்கியில் இருந்து அனுப்புவது போல, இளைஞர் ஒருவருக்கு மர்ம நபர்கள், ஒரு 'லிங்க்'கை அனுப்பினர். அதில் சில விவரங்களை பதிவிட சொன்னதையடுத்து அவரும் நம்பி அதில் பதிவிட்டார். அதற்கு பிறகு அவருடைய வங்கி கணக்கில் இருந்து 23 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments