மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையால் திருக்கோயில் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 8 ஜோடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்:-
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட திருக்கோயில்களில் தமிழக அரசால் கட்டில், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட சீதனங்கள் வழங்கி இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இன்று திருமண விழா நடைபெற்றது. 8 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தனர். இதில் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், கோயில் செயல் அலுவலர் விமலா,அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கலந்து கொண்டனர்.
No comments